உள்ளூர் செய்திகள்

மலை கிராமங்களில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி

தேனி: நக்சலைட் நடமாட்டம் காணப்படும் மலை கிராமங்களில், இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நக்சலைட்கள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் கிராமங்களில், இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட விளையாட்டு அலுவலர் தலைமையிலான குழுவினர், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து, பயிற்சி அளிக்கப்படும்; விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்கள், அந்தந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பர். கிராமத்தினரிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். இதில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்த போட்டிகளை போலீஸ் துறை, விளையாட்டு ஆணையம் இணைந்து நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்