பல்கலை வேந்தர் பதவியேற்பு தொடர்பான விதிமுறைகள் தளர்வு
மும்பை: ஒரு தனியார் பல்கலைக்கழகம் 25 ஆண்டுகள் இயங்கியிருந்து, NAAC அமைப்பிடமிருந்து A ரேங்க் பெற்றிருந்தால், அவற்றின் வேந்தராக, அக்கல்வி நிறுவனத்தை உருவாக்கியவர்கள் பொறுப்பு வகிப்பதற்கு, யு.ஜி.சி. அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பான செயல்திட்டம்(proposal) ஏற்கனவே UGC -யிடம் வைக்கப்பட்டது. அதற்கு, இப்போது UGC அனுமதியளித்துள்ளது. இதன்மூலம், வேந்தர் தொடர்பான கடுமையான விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளன. வேந்தராக பொறுப்பேற்பவர், நன்கு புகழ்பெற்ற கல்வியாளர், சமூகத்திற்கு நன்கு அறிமுகமான நபராக இருக்க வேண்டும், சம்பந்தப்பட்ட அறக்கட்டளையை சாராதவராகவும், பல்கலை நிறுவுனரின் உறவினராக இல்லாதவராகவும் இருத்தல் வேண்டும் என்பன போன்றவையே அந்த பழைய விதிமுறைகள்.