உள்ளூர் செய்திகள்

மருத்துவம் சார் படிப்புகளுக்கான விண்ணப்ப விற்பனை தொடக்கம்

மதுரை: "மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும் ஜூலை 7 முதல் வழங்கப்படும்" என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதன் விவரம்: 2014-15ம் ஆண்டு மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி., (நர்சிங்), பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி., (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல் பட்டப்படிப்பு), பி.எஸ்சி., ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோதெரபி டெக்னாலஜி உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள்,  ஜூலை 7 முதல் ஜூலை 18 வரை வினியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூலை 19 மாலை 5 மணி வரை "செயலாளர், தேர்வுக் குழு, 162, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் நேரில் பெற விரும்புவோர், அந்தந்த மருத்துவக் கல்லுாரி முதல்வர்களுக்கு விண்ணப்ப மனுவுடன் வரைவோலை இணைத்து கொடுத்து, அதன்பேரில் விண்ணப்பம் பெறலாம். கேட்பு வரைவோலை 6.7.2014க்கு முன் தேதியிட்டதாக இருக்கக் கூடாது. "செயலாளர், தேர்வுக் குழு" என்ற பெயரில் எடுக்க வேண்டும். விண்ணப்ப விலை (பொது) ரூ.350. மேலும், முழு தகவல்கள் அறிந்து கொள்ள http://www.tnhealth.org/www.tn.gov.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்