உள்ளூர் செய்திகள்

ஐந்தாண்டு பி.ஏ.பி.எல். படிப்பு: பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கியது

சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.ஏ.பி.எல். படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் நேற்று துவங்கியது. சட்டத்துறை அமைச்சர் வேலுமணி, முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு சேர்க்கை உத்தரவுகளை வழங்கினார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையின் கீழ் வரும் ஏழு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.ஏ.பி.எல். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர கலந்தாய்வு முறையில் நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் உள்ள 1,052 இடங்களுக்கு 6,570 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில் 6,293 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தரவரிசைப் பட்டியல் சில தினங்களுக்கு முன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலிங் நேற்று துவங்கியது. சட்டத்துறை அமைச்சர் வேலுமணி முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு சேர்க்கை உத்தரவுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: சட்டப் பல்கலைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இரண்டாவது வளாகம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். சட்டம் படித்த திவ்யதர்ஷினி என்ற மாணவி ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். இந்தாண்டு சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கை ரேங்க் பட்டியல் வெளியிடும் போது கட் ஆப் மார்க் 90க்கும் மேல் வந்துள்ளது.  இது தமிழகத்தில் சட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் அதிகளவில் இருப்பதை காட்டுகிறது. இன்று துவங்கும் இந்த கவுன்சிலிங் 10ம் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்