உள்ளூர் செய்திகள்

கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி: முதல்வர்

சென்னை: சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தில், 17 மாவட்டங்களில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு, அரசு மருத்துவக் கல்லூரி அங்கு துவங்கப்படும். 315 அரசு மருத்துவமனைகளில் சுத்திகரித்த குடிநீர் வழங்கும் திட்டம் 40 கோடி ரூபாயில் நிறைவேற்றப்படும். 12 அரசு மருத்துவமனைகளில், எக்ஸ்ரே படத்தை அனுப்பும் வசதியுடன் கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள், 13.20 கோடி ரூபாயில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்