அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அருள்செல்வி தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் குணசேகரி, குழந்தைகள் நலக்குழு தலைவி சகுந்தலா முன்னிலை வகித்தனர். குழந்தைகளின் உரிமைகள், அவர்களுக்கான சட்டங்கள், பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் மலையரசி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கல்யாண சுந்தரம், தொழிலாளர் ஆய்வாளர் சுரேஷ், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சகுந்தலா பங்கேற்றனர்.