அரசு கல்லூரி முதல்வர் மீது பேராசிரியை புகார்
தர்மபுரி: தர்மபுரி அரசு கல்லூரி முதல்வர் மீது, பேராசிரியை கொடுத்த புகாரின்பேரில், விசாரணை நடந்தது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் முதல்வராக பாஸ்கரன் பணியாற்றி வருகிறார். இங்கு பணியாற்றும் பொருளியல் துறை பேராசிரியை ரேவதி. இவர், முதல்வர் பாஸ்கரன், தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும், பெண்ணின்மையை களங்கப்படுத்தும் வகையில் பேசி வருவதாக, கல்லூரி கல்வி இணை இயக்குனர், மகளிர் ஆணையம், ஏ.டி.ஜி.பி., தர்மபுரி எஸ்.பி., உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பினார். தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில், பாஸ்கரன் மற்றும் ரேவதியிடம் ஆகியோரிடம், ஏ.டி.எஸ்.பி., ராமேஸ்வரி விசாரணை நடத்தினார். இது குறித்து, பேராசிரியை ரேவதி கூறியதாவது:முதல்வர் பாஸ்கரன், தொடர்ந்து எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்தார். இதுகுறித்து, கல்லூரி இணை இயக்குனர் மற்றும் ஏ.டி.எஸ்.பி., உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பி இருந்தேன். இது தொடர்பாக நடந்த விசாரணையில், பாஸ்கரன், என்னிடம் நடந்து கொண்ட முறை குறித்து தெரிவித்துள்ளேன். இவ்வாறு கூறினார். இதுகுறித்து, கல்லூரி முதல்வர் பாஸ்கரன் கூறுகையில்,“பேராசிரியை ரேவதி, அரசு விதிமுறைப்படி பாடம் சரியாக நடத்தாமல் இருந்தார். இதனால், அவரை கண்டித்ததால், அவர் என்மீது, புகார் அளித்துள்ளார்,” என்றார்.