உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் மாணவ, மாணவியருக்கான தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான தினமலர் நாளிதழ் சார்பில் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நவம்பர் 1ம் தேதி(இன்று) நடக்கிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவது, தேர்வை பயமின்றி எதிர்கொள்வது, முழு மதிப்பெண் பெறுவது, நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன. பொள்ளாச்சியில், தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி இன்று துவங்கி, நாளையும் நடக்கிறது. தினமலர் டி.வி.ஆர்., அகாடமி, கல்விமலர், மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மற்றும் நேரு குரூப் ஆப் இன்ஸ்டிட்யூட்ஸ் ஆகியவை இணைந்து நிகழ்ச்சியை வழங்குகிறது. பொள்ளாச்சி -உடுமலை ரோட்டில் மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. பத்தாம் வகுப்பு தமிழ் கல்வி மாணவர்களுக்கு, இன்று (1ம் தேதி) காலை 9.00 மணிக்கும், மதியம் 1:00 மணிக்கு பத்தாம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கான நிகழ்ச்சியும் நடக்கிறது. பத்தாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்கு கோவை பீளமேடு பி.எஸ்.ஜி.,சர்வஜனா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், டிப்ஸ் வழங்குகின்றனர். தமிழ்-பங்கஜம், ஆங்கிலம்-மெகர்னிசா, கணிதம்-பாலசுப்பிரமணியம், அறிவியல்- மீனலோச்சனி, சமூக அறிவியல்- மஞ்சுளா ஆகியோர் டிப்ஸ் வழங்குகின்றனர். ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு, கோவை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் டிப்ஸ் வழங்குகின்றனர். தமிழ்-அன்வர் பாட்சா, ஆங்கிலம்- சந்தியாபாய், கணிதம்-கீதா, அறிவியல்-1- சுகுணாதேவி, அறிவியல்-2 ரஜினி ராமன், வரலாறு-டேவிட் சாந்தகுமார், புவியியல்-மரியா ஸ்டெல்லா ஆகியோரும் டிப்ஸ் வழங்குகின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும், பாடங்களின் ப்ளூ பிரிண்ட் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை, முழு மதிப்பெண்கள் பெற பயில வேண்டிய முக்கிய வினாக்கள் எவை, படிப்பதை நினைவில் கொள்வது எப்படி, தன்னம்பிக்கையை பெருக்கிக்கொண்டு, பயமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு திறமை மிக்க ஆசிரியர்களை கொண்டும், நிபுணர்களை கொண்டும் ஆலோசனை வழங்கப்படும். இதில் பங்கேற்க, தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, நிகழ்ச்சி அரங்கிற்கு கொண்டு வரவேண்டும். இதனை மாணவர்கள் மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்