தேவகோட்டை பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா
தேவகோட்டை: தேவகோட்டை பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா, தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று துவங்குகிறது. வரும் 9ந்தேதி வரை 9 நாட்கள் தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை நடைபெறும். அனுமதி இலவசம். பதிப்பாளர் சங்க தலைவர் சேதுசொக்கலிங்கம் கூறியதாவது: பல இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்திய தேவகோட்டையில் பதிப்பாளர்கள் சார்பில் புத்தக திருவிழா நடக்கிறது. 50 தமிழ் பதிப்பாளர்கள், 10 ஆங்கில பதிப்பாளர்கள், சிடி நிறுவனங்கள் என 64 ஸ்டால்கள் உள்ளன. அரங்கில் பங்கேற்க இயலாத பிற பதிப்பகத்தின் புத்தகங்களும் கிடைக்கும். ஏ.டி.எம். வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில நிறுவனங்களில் கிரெடிட் கார்டு வசதியும் உள்ளது. மாலையில் சிறந்த இலக்கியவாதிகள் சொற்பொழிவு நடக்கவுள்ளது என்றார்.