பெண்கள் கூடைபந்து போட்டியில் சென்னை பல்கலை முதலிடம்
கேளம்பாக்கம்: தென்மண்டல அளவில், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான, பெண்கள் கூடைபந்து போட்டியில், சென்னை பல்கலை அணி முதலிடம் பெற்றது. இந்துஸ்தான் பல்கலை சார்பில், தென்மண்டல அளவிலான, பல்கலை அணிகளுக்கிடையே, பெண்கள் கூடைபந்து போட்டி நடந்தது. அதில், சென்னை பல்கலை அணி முதலிடம் பிடித்தது. கேரள எம்.ஜி., பல்கலை, பெங்களூரு எஸ்.பி.எம்., ஜெயின் பல்கலை, எஸ்.ஆர்.எம்., பல்கலை அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இந்த அணிகள், ராஜஸ்தானில், அகில இந்திய பல்கலை கூடைபந்து போட்டியில் பங்கேற்கும்.