விருத்தாசலத்தில் தினமலர், கல்விமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான தினமலர் கல்வி மலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நாளை(நவம்பர் 22) நடக்கிறது. தினமலர் நாளிதழ் கல்வி மலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் ஜெயித்துக் காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி நாளை (22ம் தேதி), விருத்தாசலம் பஸ் நிலையம் பின்புறம், ஆலடி சாலையில் உள்ள தெய்வம் திருமண மண்டபத்தில் காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. நிகழ்ச்சியில், அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வை எதிர்கொள்வது மற்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள் வழங்கப்படுகிறது. பங்கேற்கும் மாணவ, மாணவிகள் குறிப்பெடுக்க இலவசமாக நோட்டு, பேனா, புளூபிரின்ட் எனப்படும் தேர்வு முக்கிய வினாக்கள் தயாரிக்கும் முறை பற்றிய விளக்கப் புத்தகம், உடம்பும் மனசும் நல்லா இருக்கணும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் கண்டிப்பாக சீருடையில் வர வேண்டும்.