உள்ளூர் செய்திகள்

கற்பித்தலில் புதுமை படைத்த இரு ஆசிரியர்களுக்கு விருது

ராமநாதபுரம்: கம்ப்யூட்டர் மூலம் திட்டம் சார்ந்த கற்பித்தலில் புதுமை படைத்த இரு ஆசிரியர்களுக்கு விருது கிடைத்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கம்ப்யூட்டர் மூலம் திட்டம் சார்ந்த கற்பித்தல் முறையில் மாற்றங்கள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மாற்றத்திற்கான வடிவம் குறித்து சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பெர்ஜின், முத்துராமலிங்கபுரம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முருகானந்தம் ஆகியோர் மாணவர்கள் உதவியுடன் கற்பித்தலில் புதுமை குறித்து கல்வி வல்லுனர்களிடம் செயல் விளக்கம் அளித்தனர். இவ்விரு ஆசிரியர்களின் ஆய்வு ஏற்கப்பட்டு, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். குஜராத்தில் நடந்த தேசிய கருத்தரங்கில் இரு ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்