உலக திறனாய்வு திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 6,7,8 ம் வகுப்பு மாணவர்களுக்கு உலக திறனாய்வு திட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு முதன்மை செயலர் முகம்மது நஜூமுதீன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை உறுப்பினர் செயலர் ஷம்புகல்லோலிகர், கலெக்டர் நந்தகுமார் முன்னிலை வகித்தனர். விளையாட்டு துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விளக்கப்பட கண்காட்சி நடந்தது. பரிசளிப்பு: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் மாநில அளவில் குண்டு எறிதலில் மூன்றாமிடம் பிடித்த கவுரிசங்கர், நீச்சல் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த ஜென்னட் ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் (பொறுப்பு) நியூகின்செல்லப்பா, முதுநிலை மண்டல மேலாளர் வாழ்மீவராஜா, டி.ஆர்.ஓ., விஸ்வநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோசப்பாத்பிரிட்டன், முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணுபலர் பங்கேற்றனர்.