உள்ளூர் செய்திகள்

காந்திகிராம பல்கலை பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிர்வாகம் முடிவு

காந்திகிராமம்: காந்திகிராம பல்கலையில் அடுத்த கல்வியாண்டில் (2015--16) பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காலத்திற்கேற்ப கல்வி திட்டங்களில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக அனைத்து பல்கலையிலும் சி.பி.சி.எஸ்., (சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்) அமல்படுத்த பல்கலை மானிய குழு உத்தரவிட்டுள்ளது. அடுத்த 2015--16 கல்வியாண்டில் காந்திகிராம பல்கலையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 22 துறைகள் மற்றும் அதை சார்ந்த மையங்களில் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பாக துறைத்தலைவர்களுடன் துணைவேந்தர் ஆலோசனை நடத்தி வருகிறார். துணைவேந்தர் நடராஜன் கூறியதாவது: பல்கலையில் சேரும் மாணவர்கள் முக்கிய பாடம், துணைப் பாடம், திறன் மேம்பாடு பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். பல்கலை அளவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரங்களின் எண்ணிக்கை 7 ல் இருந்து 10 ஆக உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் 2 மணி நேரம் செய்முறை அல்லது களப்பயிற்சி அளிக்கப்படும். கடைசி செமஸ்டருக்கு மற்ற பல்கலையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, வெளி கண்காணிப்பாளர்களால் தேர்வு நடத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் இடையில் நிற்கும் மாணவர்கள் வேறு கல்லூரி மற்றும் பல்கலையில் எளிதாக சேர முடியும். இதன்மூலம் உயர்கல்வியின் தரம் மேம்படுத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்