உள்ளூர் செய்திகள்

தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

இளையான்குடி: இளையான்குடி வட்டார வள மையத்திற்குட்பட்ட தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது. இளையான்குடி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சியை மேற்பார்வையாளர் சாதிக் அலி துவக்கி வைத்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் சூசை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்பட்ட பயிற்சி, கற்றலில் ஏற்படுத்திய விளைவு, கற்றலில் ஏற்படும் குறைகளை களைய பயிற்சி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும், பாடப்பகுதியில் உள்ள கடினமான பகுதிகளை, பயிற்சியின் மூலம் எவ்வாறு எளிமைப்படுத்தி கற்பிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்