நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஓவியப் போட்டி
சென்னை: சென்னை, அடையாறில் உள்ள நிலத்தடி நீர் வாரியம், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஓவியப் போட்டிகளை நடத்தி, பள்ளிக்கு மூன்று பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இறுதி போட்டியை நடத்தியது. அதில், சென்னை, மேற்கு அண்ணா நகர், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியின் 6ம் வகுப்பு மாணவி, வினிஷா, அண்ணாநகர், சின்மயா மெட்ரிக் பள்ளியின் 7ம் வகுப்பு மாணவி பூஜா ஸ்ரீ, கோவை பாரதி மெட்ரிக் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி அமிதாஸ்ரீ ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை பெற்றனர். இதையடுத்து, அவர்கள் டெல்லியில் நடக்க உள்ள நீர் சேமிப்பு குறித்த தேசிய அளவிலான ஓவியப் போட்டியில், பங்கேற்க உள்ளனர்.