இரண்டாம் இடத்தை பிடித்த மாநில கல்லுாரி அணி
சேப்பாக்கம்: சென்னை பல்கலைக்கழகத்தின், கல்லுாரி மண்டல அணிகளுக்கு இடையிலான, கபடி இறுதி போட்டியில், டி.பி., ஜெயின் கல்லுாரியிடம், மாநில கல்லுாரி அணி தோல்வி அடைந்து, இரண்டாம் இடத்தை பிடித்தது. சென்னை பல்கலைக்கழகம் சார்பில், அதற்கு உட்பட்ட, கல்லுாரிகளின் ஏ மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டி, டி.பி., ஜெயின் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. காலிறுதி போட்டியில், மாநில கல்லுாரி அணி 28-12 என்ற, புள்ளிக் கணக்கில், ஏ மண்டல அணியை வென்றது. அதேபோல், மாநில கல்லுாரி அணி, அரையிறுதி போட்டியில், 26-18 என்ற, புள்ளி கணக்கில், காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லுாரி அணியை வீழ்த்தியது. இறுதி போட்டியில், டி.பி., ஜெயின் கல்லுாரி அணி 33-22 என, மாநில கல்லுாரி அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில், மாநில கல்லுாரி அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. இறுதியில், முதல், இரண்டாம் இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.