உள்ளூர் செய்திகள்

பள்ளிகள், மாணவர் விடுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மாணவர் விடுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகேஷ் எஸ்.பி., கூறியதாவது: குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மாணவ, மாணவிகள் விடுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தினமும் காலையிலும், மாலையிலும் பள்ளி நேரங்களில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர். தவிர, பள்ளி உள்ள பகுதிகளில் அடிக்கடி ரோந்து சென்று வருவர். ஒவ்வொரு முறையும் ரோந்து சென்று வரும் போதும், அங்குள்ள ரோந்து படிவ நோட்டில் கையெழுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்துடன் எஸ்.பி., அலுவலகத்திற்கு நேரடி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் எந்த நேரமும் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தவிர, இரவு நேரங்களிலும் போலீஸ் பீட் பட்டியலில் பள்ளிகள் இடம் பெற்றுள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்