அரசு கல்லூரியில் செம்மொழி குறித்த சர்வதேச பயிலரங்கம்
சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் தமிழாய்வுத்துறையில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன நிதியில் ‘செவ்வியல் இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள்’ எனும் தலைப்பில் 10 நாள் பன்னாட்டு பயிலரங்கம் துவங்கியது. ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். முதல்வர் ஜெகநாதன் தலைமை வகித்தார். குண சேகரன் எம்.எல்.ஏ., முன்னாள் பேராசிரியர்கள் ம.பெ. சீனிவாசன், ராமசாமி, தமிழ் துறை தலைவர் கிளாட்சன் பேசினர். மதுரை தியாகராசர் தமிழ் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பயிலரங்கை துவங்கி பேசியதாவது: தொன்மை, வளமை, பண்பாட்டு செழுமை கொண்ட தமிழ்மொழி உலகின் செம்மொழிகளுள் ஒன்றாக மேனாட்டு அறிஞர்களால் போற்றப்பட்டுள்ளது. 41 செவ்வியல் இலக்கிய நூல்களும் அன்பு, பிற உயிருக்கு தீங்கு செய்யாமை, நன்றி மறவா பண்பு, விருந்தோம்பல், ஈகை, வீரம், தலைமை பண்பு, வாய்மை, பொய்யாமை, அறம், நட்பு, நடு நிலை, கல்வி, பொருள் நெறி, ஆளு மை, ஒழுக்கம், இல்லறநெறியை விளக்குகின்றன. இவற்றை ஒவ் வொருவரும் பின்பற்றி வாழ வேண்டும், என்றார்.