பாராமெடிக்கல் படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் பணி வாய்ப்பு
சென்னை: அரசு பொது மருத்துவமனையில், நியூரோ சர்ஜிகல் பிரிவு மற்றும் எலக்ட்ரோ என்செபலாகிராபிக் துறைகளில், தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு, அரசு மருத்துவ கல்லூரிகளில், பாரா மெடிக்கல் சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, ஏற்கனவே உள்ள விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, சம்பந்தப்பட்ட வர்கள், பிளஸ் 2 தேர்வில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் எடுத்து படித்தவராக இருத்தல் வேண்டும். கூடுதலாக, அரசு மருத்துவ நிறுவனங்கள் அல்லது மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், இ.இ.ஜி., அல்லது இ.எம்.ஜி., சான்றிதழ் படிப்பை கட்டாயம் படித்திருக்க வேண்டும். இது தவிர, அவர்களுக்கான ஊதிய விதிகளிலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது.