யு.டி.சி., எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்
புதுச்சேரி: முதுநிலை எழுத்தர் பணிக்கான, இலவச பயிற்சி முகாம், லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. புதுச்சேரி அரசின் முதுநிலை எழுத்தர் (யு.டி.சி.) பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, உள்ளாட்சித் துறை மற்றும் இந்திய பொது நிர்வாக நிறுவனம் சார்பில், இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட, விண்ணப்பதாரர்களுக்கான பயிற்சி முகாம், லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமிற்கு, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, இலவச பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் வாழ்த்தி பேசினார். இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் புதுச்சேரி கிளை தலைவர் தனபால் நோக்க உரையாற்றினார். ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மாதிரி தேர்வு ஆகிய தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டது. முகாமில், 200க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.