உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் போராட்ட அறிவிப்பு; தொடர்கிறது சந்திப்பு இயக்கம்

வேடசந்தூர்: ஆசிரியர் சங்கங்களின் சார்பில் அக்.8ல் மாநிலம் தழுவிய போராட்டத்தையொட்டி, ஆசிரியர் சந்திப்பு இயக்கம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 24 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ என்ற பெயரில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 8ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலைமேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 24 சங்கங்கள் இணைந்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. முக்கியமாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொகுப்பு ஊதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கியுள்ளன. இதற்காக போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக, அக்.8ல் நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் படி சக ஆசிரியர்களை, அலை@பசி மூலமும், நேரிலும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக பாராமுகமாக இருந்த தற்போதைய தமிழக அரசு, நேற்று திடீரென ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்