உள்ளூர் செய்திகள்

புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்துக் கேட்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் இன்று (12ம் தேதி) புதிய கல்விக் கொள்கை தொடர்பான மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை முழுமைப்படுத்த மாநில அரசுகள் அனைத்துக் கொம்யூன்களிலும் வட்டார அளவில் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது. அடுத்த கட்டமாக, மாநில கருத்துக் கேட்பு கலந்தாய்வுக் கூட்டம் கல்வியாளர்களைக் கொண்டு, புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக கருத்தரங்க கூடத்தில் இன்று (12ம் தேதி) காலை 10.00 மணியளவில் நடக்கிறது. பல்கலைக் கழக துணைவேந்தர் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் கல்வித்துறைச் செயலர் ராகேஷ் சந்திரா, பள்ளிக் கல்வி இயக்குனர் குமார், அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் கிருஷ்ணராஜ், கல்வித் துறை அதிகாரிகள் மாநில பயிற்சி மைய விரிவுரையாளர்கள், அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் விவாதிக்க உள்ளனர்.  மைசூர் கல்வியியல் கல்லூரி மண்டல இயக்குனர் விஸ்வனா தப்பா, கல்வியாளர்களின் விளக்கங்களை கேட்கிறார். கல்வி யாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்