தூய்மை இந்தியா திட்டம்; பள்ளியில் தூய்மைப்படுத்தும் பணி
புதுச்சேரி: புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பள்ளி வளாகம் துாய்மைப்படுத்தப்பட்டது. துாய்மை பணியை, நெல்லித் தோப்பு தொகுதி எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் துவக்கி வைத்தார். பட்டதாரி ஆசிரியர் மோகன்தாஸ் வரவேற்றார். துாய்மை குறித்து, தலைமை ஆசிரியர் பாலசுந்தரம் விளக்கி கூறினார். பட்டதாரி ஆசிரியர் பொன்னுரங்கம் நன்றி கூறினார். துவக்க நிகழ்ச்சியை தொடர்ந்து, மாணவ மாணவியர் பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்தினர்.