உள்ளூர் செய்திகள்

கல்வி கட்டண நெருக்கடி தந்தை தூக்கிட்டு தற்கொலை

சிக்கமகளூரு: மகன்களின் கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால், மனம் வருந்திய தந்தை, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிக்கமகளூரைச் சேர்ந்தவர் முஹம்மது கவுஸ், 40. இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன், 7ம் வகுப்பிலும், இளைய மகன் முதல் வகுப்பிலும் படித்து வருகின்றனர். இரண்டு மகன்களின் பள்ளி கட்டணம், 70 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. பள்ளி துவங்குவதற்கு முன், அங்கும், இங்கும் கடன் வாங்கி, 44 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை செலுத்தினார். அரையாண்டு தேர்வு துவங்குவதற்குள், மீதமுள்ள, 26 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்&' என, பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. தன் உறவினர்கள், நண்பர்களிடமிருந்து கடனாக வழங்கும்படி முஹம்மது கவுஸ் கேட்டார்; கிடைக்கவில்லை. இதனால், மன வேதனையடைந்த அவர், சோட்டா மக்கான் சாலையில் உள்ள தன் நண்பர் கடையில், நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிக்கமகளூரு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்