உள்ளூர் செய்திகள்

தனியார் பல்கலையில் மீன் வளப்படிப்பு; மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடி: சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மீன் வள பட்டப்படிப்பு துவக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். நேற்று காலை தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி மாணவர்கள், கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மாணவர்கள் தரப்பில் தெரிவித்ததாவது:தமிழகத்தில் மீன் வளக்கல்லூரி எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த காலத்தில் 1977ல் துவக்கப்பட்டது. பொன்னேரியில் மீன் வளக்கல்லூரியும், நாகப்பட்டிணத்தில் மீன் வளப்பொறியியல் கல்லூரியும் அரசால் துவக்கப்பட்டது. 2012 முதல்வர் ஜெயலலிதா இவை மூன்றையும் இணைத்து மீன் வளப்பல்கலை கழகமாக சட்டசபையில் அறிவித்தார். ஆசியாவிலேயே முதல் மீன் வளப்பல்கலை கழகம் நாகப்பட்டிணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது நல்ல நிலையில் இயங்கி கொண்டிருக்கிறது. இக்கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். மருத்துவக் கல்லூரிக்கு இணையான கட் ஆப் மதிப்பெண் 190 முதல் 194 வரை எடுத்த மாணவர்களுக்கு இக்கல்லூரிகளில் 80 பேரும், மீன் வளப்பொறியியல் கல்லூரியில் 20 பேரும் ஆண்டு தோறும் படித்து வருகின்றனர். இப் பட்ட படிப்புகளுக்கான பாடத்திட்டத்தினை இந்திய வேளாண் ஆராய்ச்சிகழகம் வழங்கி வருகிறது. இந்நிலையில் இதற்கு போட்டியாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இளநிலை நான்கான்டுக்கான மீன் வள இளங்கலை பட்டப்படிப்பு துவக்கப்படும், என அறிவித்துள்ளது. இதற்கான பாடத்திட்டம், என்ன, என எதுவும் தெரியவில்லை. அண்ணாமலை பல்கலை மீன் வள பாடப்பிரிவு துவக்கினால், அரசு மீன் வளக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கபடுவார்கள், என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்