உள்ளூர் செய்திகள்

பெண் கல்வி முக்கியத்துவம்; போட்டி நடத்தி பரிசளிப்பு

கோபி: பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த, கோபி யூனியனுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி நடந்தது. பெண் கல்வியின் முக்கியத்துவமாக, சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை, பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, உண்டு உறைவிட பயிற்சி பள்ளி, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி நடத்த அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. அதன்படி கோபி யூனியனுக்கு உட்பட்ட, 81 அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான போட்டி நேற்று நடந்தது. கோபி வட்டார வளமைய மேற்பார்வையாளர் லதா, போட்டியை துவக்கி வைத்தார். இவற்றில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்