உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறை பயிற்சி

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு தேர்விற்கு நேரடி தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தோருக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. சமச்சீர் கல்வி முறையில் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு பொது தேர்விற்கு நேரடி தனி தேர்வர்களாக விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வு பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் நடக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வரும் 19, 20, 26, 27 மற்றும் ஜன., 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விழுப்புரத்தில், அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கும், காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கும் பயிற்சி நடக்கிறது. அதே போல், உளுந்தூர்பேட்டையில் இரு பாலருக்கும், அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடக்கிறது. திண்டிவனத்தில், புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கும், தேசிய மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கும், திருக்கோவிலூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் இரு பாலருக்கும் நடக்கிறது. கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கும், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கும், சங்கராபுரம் வட்டத்தில் மாணவிகளுக்கு, தேவபாண்டலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியிலும், மாணவர்களுக்கு- சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், பயிற்சி நடக்கிறது. சின்னசேலம் வட்டத்தில், மாணவிகளுக்கு கச்சிராயப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடக்கிறது. இந்த அறிவியல் பாட செய்முறை தேர்வு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க அழைப்பாணை கடிதம் தனியே மாணவ, மாணவிகள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று (17ம் தேதி) வரை கடிதம் கிடைக்க பெறாதவர்கள் நாளை 18ம் தேதி தாங்கள் விண்ணப்பித்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று, மைய விபரத்தை அறிந்து பயிற்சி பெறலாம். இத்தகவலை சி.இ.ஓ., மார்ஸ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்