உள்ளூர் செய்திகள்

டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கள்ளக்குறிச்சி: கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது. இக்கல்லுாரியில் கடந்த 2005-2015 கல்வி ஆண்டு வரையிலான பி.எட்., மற்றும் எம்.எட்., பட்டம் படித்த மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது. விழாவிற்கு தாளாளர் மனோகர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ராமு வரவேற்றார். கல்லுாரி முதல்வர் லதா, துணை முதல்வர் பாலசுந்தரம் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவர் சங்கத் தலைவராக திருமுருகன், துணைத்தலைவர் கலையரசி, செயலாளர் அழகுவேல், துணை செயலாளர் அறிவழகன், பொருளாளர் ஷோபா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கலைநிகழ்ச்சிகள், பேச்சு, விளையாட்டு உள்ளிட்ட திறனறிப்போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மாணவ ஆசிரியை பொன்மணி தொகுத்தளித்தார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சிவராமன் செய்தார். பேராசிரியர் மூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்