மாணவர் திறன் அறிந்து செயல்படும் பப்ளிக் ஸ்கூல்
வத்தலக்குண்டு: பிளேட்டோவின் கூற்றுப்பட்டி இன்றைய குழந்தைகளிடம் எதையும் கட்டாயப்படுத்தி கற்றுக் கொடுக்க முடியாது. அவர்கள் புதிய தேடல் உள்ளவர்களாகவும், கடினமான விஷயங்களை கூட எளிதில் கற்று விரைந்து செயல்படுபவர்களாகவும் உள்ளனர். இதனால் மாணவர்கள் ஒவ்வொருவரின் தனித்திறன் அறிந்து அவர்களின் போக்கிலேயே செயல்திறனுடன் கூடிய கல்வியை வத்தலக்குண்டு கணவாய்பட்டியில் உள்ள பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் மூலம் வழங்கி வருகிறது. இங்கு சமூக, உடல், மனரீதியான வளர்ச்சியை மேம்படுத்துதல், சமுதாய அக்கறை உள்ள சாதனையாளர்களாக உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளது. மாணவர்களின் தேடலுக்கு ஏற்ற டிஜிட்டல் நுாலகம், நவீன தொழில்நுட்பத்துடன் கம்ப்யூட்டர் லேப், அறிவியல் ஆய்வுக்கூடம் உண்டு. இங்குள்ள பாடத்திட்டத்தின் பயனாக மாணவர்கள் இசை, நடனம் மற்றும் யோகா, கராத்தே, சிலம்பம், ஸ்கேட்டிங், அபாகஸில் மாநில, அளவிலான போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளனர். ஆங்கில பேச்சுப் பயிற்சி, கம்ப்யூட்டர் தனிப்பயிற்சி ஆரம்பம் முதல் வழங்கி மைக்ரோசாப்ட் சான்றிதழ் வழங்குகின்றனர். உள், வெளி அரங்கு விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பள்ளி நிகழ்ச்சிகளை ஆண்ட்ராய்ட் போன் மூலம் அறியும் வசதி, வாகனங்களில் ஜி.பி.எஸ்., வசதி செய்துள்ளதால் இருப்பிடத்தை அறிய முடிகிறது. சேவை மனப்பான்மை கொண்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓட்டுனர், நடத்துனர் என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் எங்கள் பள்ளியைத் தேடி மாணவர்கள் அதிகளவில் வருகின்றனர். வளாகம் முழுவதும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு பசுமையான, கிராமிய எழில் கொஞ்சும் சூழலுடன் பள்ளி அமைந்துள்ளது. மேலும் தொடர்புக்கு: 86438-06186.