உள்ளூர் செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை இலவச ’ஆன்லைன்’ வசதி

பழநி: பழநி சுப்ரமண்யா பொறியியல் கல்லுõரியில் அண்ணா பல்கலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இலவச ஆன்லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலையின் கீழ் உள்ள பொறியியல் கல்லுõரிகளில் சேர்வதற்கு இவ்வாண்டு இணைய தளம் மூலம் மாணவர்கள் தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்களை இலவசமாக பூர்த்தி செய்ய சுப்ரமண்யா பொறியியல் கல்லுõரியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 முதல் மாலை 4 மணி வரை இலவச மாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாணவர்கள் தங்கள் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்றிதழ் கொண்டுவர வேண்டும். அண்ணா பல்கலைக்கு செலுத்தவேண்டிய ரூ.500 டிமாண்ட் டிராப்ட் அல்லது டெபிட் கார்டு செலுத்த வேண்டும். கல்லுõரி சார்பில் தினமும் காலை 10 , பகல் 2 மணிக்கு பழநி பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் இயக்கப்படுகிறது. இந்த வசதியை மாணவர்கள் இன்று முதல் (ஏப்.,21) மே 10 வரை பெறலாம் என, கல்லுõரி முதல்வர் சரவணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்