உள்ளூர் செய்திகள்

கலைஞர் கருணாநிதி கல்லூரியில் பட்டமளிப்பு விழா கோலாகலம்

கோவை: கண்ணம் பாளையம் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.இதில், இளங்கலை, முதுகலை பொறியியல் படிப்பு மற்றும் மேலாண்மை கல்வி முடித்த, 421 மாணவர்களுக்கு பட்டசான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அண்ணா பல்கலை தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி திவ்யாவுக்கு, தங்கப்பதக்கம் மற்றும், 17 பேருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.சென்னை ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிர்வாக இயக்குனர் செல்லப்பன் சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில், வெற்றி பெற, முதலில் குறிக்கோள் வேண்டும். அதுவும் சாதாரண குறிக்கோளாக இல்லாமல், புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கும் விதமாக இருக்க வேண்டும், என்றார்.கல்லுாரி நிறுவனத்தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் இந்து முருகேசன், நிர்வாக அறங்காவலர் வித்யா கோகுல், அவினாசிலிங்கம் பல்கலை முன்னாள்துணைவேந்தர் ஷீலா ராமச்சந்திரன், முதல்வர் மோகன்தாஸ், இயக்குனர் அன்பழகன், பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்