உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது: பிரதமர் மோடி

புதுடில்லி: டில்லியில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், கொரோனா பிரச்னை காரணமாக, பள்ளிக் குழந்தைகள் பங்கேற்காதது வருத்தம் அளிப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டில்லியில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது, ஏராளமான பள்ளி குழந்தைகள் பங்கேற்பது வழக்கம். அதிகாலையிலேயே கண் விழித்து, தங்கள் பெற்றோருடன், செங்கோட்டை அருகே கூடும் குழந்தைகள், கைகளில் தேசியக் கொடியை ஏந்தி, உற்சாகமாக அசைப்பர். பிரதமர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவுக்கு வரும் போது, கைதட்டி உற்சாகப்படுத்துவர். ஆயிரக்கணக் கான குழந்தைகளின் உற்சாகத்தால், சுதந்திர தின விழா நடக்கும் இடம் முழுதும் சந்தோஷம் நிரம்பி வழியும். பிரதமர் உள்ளிட்டோர், குழந்தைகளுடன் சிறிது நேரம் உரையாடி, அவர்களை உற்சாகப்படுத்துவர்.  ஆனால், நேற்று நடந்த விழாவில், பள்ளி குழந்தைகள் பங்கேற்கவில்லை. கொரோனா வைரஸ், குழந்தைகளை எளிதில் தாக்கும் என்பதால், பள்ளி குழந்தைகளுக்கு விழாவில் அனுமதி அளிக்கப்படவில்லை.இது குறித்து, பிரதமர்மோடி கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா நடக்கும் இடத்தில், ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகளின் உற்சாகம் கரை புரளும். அதைப் பார்த்ததுமே, நமக்கும் உற்சாகம் தொற்றும். இந்தாண்டு குழந்தைகள் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்