உள்ளூர் செய்திகள்

புரிந்து படித்தால் சாதிக்கலாம்: மாணவியின் உபயோகமான டிப்ஸ்

திருவள்ளூரில்  நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய திருவள்ளூர் மாவட்டத் தில் முதல் மூன்று இடங்களை பிடித்த, மூன்று மாணவிகளுக்கு தினமலர் நாளிதழ் அவர்களைப் பாராட்டி, வெள்ளிப்பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கியது.இதில் முதல் இடம் பிடித்த சண்முகலட்சுமி (500க்கு 490 மதிப்பெண்கள்) இரண்டாம் இடம் பிடித்த மாணவிகள் கே.திவ்யா மற்றும் ஏ.குருஸ்ரீ (500க்கு 488 மதிப்பெண்கள்) ஆகியோருக்கு தினமலர் சார்பில் கல்வியாளர் ரமேஷ் பிரபா வெள்ளிப் பதக்கம் அணிவித்து அக்னி சிறகுகள் புத்தகங்களை வழங்கி பாராட்டினார்.வெள்ளிப் பதக்கத்தை பெற்ற திவ்யா பேசும் போது,நான் கடந்த ஆண்டு தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். எனக்கு தன்னம்பிக்கை வளர்த்து இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்திலேயே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளேன்.அதற்காக எனக்கு வெள்ளிப் பதக்கமும், சிறப்பு பரிசும் கிடைத்தது பெருமையாக உள்ளது. எனது சாதனைக்கு காரணம் நான் படிக்கும் போது பாடத்தில் ஏற்படும் சந்தேங்களை உடனடியாக ஆசிரியர்களிடத்தில் சென்று தெரிந்து கொள்வேன்.ஆசிரியர்களும் நன்றாக சொல்லிக் கொடுத்தனர். நீங்களும் வரும் பொதுத் தேர்வில் எளிதாக சாதித்துக் காட்டலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, ஆசிரியர்கள் தினசரி நடத்தும் பாடங்களை அன்றே புரிந்து படித்தால் எளிதாக சாதித்து, மாவட்டம் என்ன மாநிலத்திலேயே முதல் மாணவன், மாணவியாக வரலாம்.அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்