உள்ளூர் செய்திகள்

பாகூர் பாரதி பள்ளியில் காலை உணவு வழங்கல்

பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட்டது.புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி பெயரில் காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது. அதையொட்டி, கிராமப்புற பகுதியான பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் சிவராமரெட்டி பங்கேற்று, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினார். தலைமையாசிரியர் தேவதாஸ், விரிவுரையாளர் மேரி ஆரோக்கியம் கிளாந்தின், உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்