உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி சுவற்றில் ஓவியம் பட்டாம்பூச்சிகள் கைவண்ணம்

திருப்பூர்: &'பட்டாம்பூச்சி&' தன்னார்வ அமைப்பினரின் கைவண்ணத்தில், திருப்பூர் வடக்கு ஒன்றியம் அண்ணா நெசவாளர் காலனி துவக்கப்பள்ளி ஓவியங்களால் ரம்மியாக காட்சியளிக்கிறது.மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, &'பட்டாம்பூச்சி&' எனும் தன்னார்வ குழு அமைப்பினர், திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளை கவர்ந்திழுக்கும் ஓவியங்களை வரைந்து அசத்தி வருகின்றனர்.இது குறித்து, &'பட்டாம்பூச்சி&' ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் கூறியதாவது:மாணவர்கள் பள்ளிகளுக்குள் நுழையும்போது, புத்துணர்ச்சியோடு வர வேண்டும் என்பதற்காக, வகுப்பறைகள், சுற்றுச்சுவர்களில் இலவசமாக ஓவியங்கள் வரைந்து வருகிறோம். கார்ட்டூன் ஓவியங்களை, 2 நாளில் வரைந்து முடித்தோம். என்னுடன், ஆசிரியர்கள் கார்த்திகேயன், நல்லகணபதி இணைந்து பணியாற்றினர். விருப்பமுள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், 78711 88752 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்