ஆசிரியர்கள் நிவாரணமாக ஒரு நாள் ஊதியம் வழங்கல்
திண்டுக்கல்: &'முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக&' திண்டுக்கல் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் அறிவித்துள்ளனர்.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன், பொருளாளர் கதிரேசன்: கொரோனா பேரழிவில் இருந்து மீட்க அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமையை உணர்ந்து எங்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளோம். அதனை இம்மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டும், என்றனர்.உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் மாயவன், செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன்: கொரோனாவை விரட்டும் முதல்வரின் போர்க்கால நடவடிக்கைக்கு நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியத்தை வழங்க ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. இம்மாத ஊதியத்திலேயே அதனை பிடித்தம் செய்ய வேண்டும், என்றனர்.