உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க கால அவகாசம்

பெங்களூரு: உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க, மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பெங்களூரு ஊரக மாவட்ட பிற்படுத்தப்பட்ட சமூக வளர்ச்சித்துறை அதிகாரி பவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:உயிர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு சில பல்கலைகழகங்களில் பதிவு எண்ணிக்கைபடி ஒதுக்கீடு செய்துள்ளதால், மாநில கல்வி உதவித்தொகை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.மேலும், பொது முடக்கத்தால், மாணவர்கள் விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க, மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மேலும், மாணவர்கள் எந்தெந்த சான்றிதழ்கள் வழங்க வேண்டும் போன்ற கூடுதல் தகவல்களுக்கு www.bcwd.karnataka.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.  விண்ணப்பங்களை, www.ssp.postmatric.karnataka.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.கூடுதல் தகவல்கள் பெற, துறை அலுவலர்களின் தொலைபேசி எண்களான, 8050770005, 8050770004 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.அதேபோல், postmatrichelpdesk@karnataka.gov.in என்ற முகவரிக்கு சந்தேகங்களை அனுப்பியும் தகவல் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்