உள்ளூர் செய்திகள்

பள்ளிகள் திறக்கும் முன்பே கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்

திண்டுக்கல்: பள்ளிகளைத் திறக்கும் முன்பே இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறியிருப்பதாவது:ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பாதுகாக்க புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு இவ்வாண்டுக்கான பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும். இளநிலை - முதுநிலை படிப்புகளில் வெவ்வேறு பாடம் படித்தோருக்கு முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கிடையாது. எனவே, பட்டதாரி ஆசிரியர்களை மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.பள்ளிகளை திறக்கும் முன்பே இடமாறுல் கலந்தாய்வை நடத்த வேண்டும். இதில் பங்கேற்க 3 ஆண்டுகள் தேவை என்ற நிபந்தனையை அகற்ற வேண்டும். கடந்த ஆண்டுகளில் பணிநிரவலால் தொலை துாரங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்