உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறி: பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக அரசால், மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி உள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? என முதல்வரிடம் நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் பல முறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதன் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு. அதிமுக அரசு செயல்படுத்திய &'நீட்&' தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கப பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், தேர்வுக்கு மாணவர்களுக்கு அதிமுக அரசு அளித்தது போல் உரிய பயிற்சிகள் வழஙகி உறுதுணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.மாண்புமிகு அம்மா அரசு செயல்படுத்திய "நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல்,தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அம்மா அரசு அளித்தது போல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்