தொட்டு விடும் தூரத்தில் வெற்றிக்கனி; மாணவர்கள் நெகிழ்ச்சி
காலையில் பத்தாம் வகுப்பு ( ஸ்டேட் போர்டு) மாணவர்களுக்கும், மாலையில் பத்தாம் வகுப்பு மெட்ரிக் மாணவ, மாணவிகளுக்கும் பயமின்றி தேர்வை எதிர்கொண்டு எளிதில் சதம் அடிக்க ஆசிரியர்கள் கூறிய டிப்ஸ்:சர்க்கரையம்மாள், தமிழ் (தலைமை ஆசிரியர், சமத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி): தமிழ் பாடம் புரிந்து படித்தால் மட்டுமே முழு மதிப்பெண் பெற முடியும். செய்யுள் பகுதியில் கவனம் தேவை. இதில்தான் அதிக மதிப்பெண் பெற முடியும். முதல் தாளில் செய்யுள் பிரிவில் 58 மதிப்பெண்ணும், உரைநடையில் 42 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.ஒரு மதிப்பெண்ணுக்கான வினாக்களை தொகுத்து வைத்து படிக்க வேண்டும். செய்யுள் வினாக்களுக்கு பாடல் வரிகளை எழுதி, கோடிட்டு காட்டினால், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். திருக்குறள், ஆசிரியர்களின் பெயர் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். இரண்டாம் தாளில், 70 மதிப்பெண் படித்தும், 30 மதிப்பெண் புரிந்து எழுதும் போது கிடைக்கும். இலக்கண பகுதியில் கவனம் வேண்டும். துணைப்பாட கட்டுரைகளை தெளிவாக எழுத வேண்டும். வாக்கியத்திற்கு முன்னும், பின்னும் அழகிய வாக்கியத்தை இணைத்து எழுதலாம். கடிதத்தை பலமுறை எழுதி பார்க்க வேண்டும். கட்டுரை பகுதிக்கு பக்க தலைப்புகளை தெளிவாக இட வேண்டும். இதற்கு ஒரு மதிப்பெண் உண்டு.செந்தில்வடிவு, கணிதம் (ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளி): கணக்கு தேர்வு எழுதும் போது திட்டமிட்டு நேரத்தை சரியாக ஒதுக் கினால் முழு மதிப்பெண் பெற முடியும். எளிதாக மதிப் பெண் பெற உதவுவது "கிராப்&'. இதில் அலகுகள் சரியாக குறிக்க வேண்டும். இதன் அட்டவணையை "கிராப்&' தாளின் பின்புறமோ அல்லது தாள் இணைக்கும் பக்கதிலோ போட வேண்டும். 3, 3எ, 6, 10, 10எ, 22 ஆகிய தேற்றத்தை எழுதி மனப்பாடம் செய்தால், முழு மதிப்பெண் கிடைக்கும்.சூத்திரங்களை எழுதி பார்க்க வேண்டும். ஐந்து மதிப்பெண் வினாக்களில், கூட்டுதொடர், அளவியலில் மாறா கண அளவு, இயற்கணிதத்தில் காரணி, வர்க்கமூலம், பயன் பாட்டு கணிதத்தில், வலை அமைத்தல் திட்டமிடல், பகுபத வடிவியலில் நாற்கரத்தின் பரப்பு, சமன்பாடு அமைத்தல், புள்ளியியலில் திட்ட விலக்கம், நிகழ்தகவு ஆகிய பிரிவுகளை நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.முக்கோணவியலில் 30, 45, 60 ஆகிய டிகிரி கொடுக்கப்பட்டுள்ள கணக்குகளை தேர்வு செய்யலாம். கணத்தில் வெண்படம் சரியாக வரைய வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு கவனம் தேவை. கணக்கை போட்டு பார்த்து, விடை எழுத வேண்டும். தினமலர் வழங்கும் புளூ பிரிண்டில் ஒவ்வொரு பிரிவுக்கும் முக்கிய வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை சரியாக போட்டு பார்த்தாலே கணக்கில் அதிக மதிப்பெண் பெறலாம்.பிரியா, ஆங்கிலம் (சமத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி): அனைவருமே புத்திசாலி மாணவர்கள்தான்; படிக்கும் முறையை புரிந்து படித்தால் சதம் அடிக்கலாம். பிழையில்லாமல், தெளிவாக எழுதினால் மதிப்பெண் குறைய வாய்ப்பிருக்காது. முதல்தாளில், கட்டுரை எழுதும்போது உட்தலைப்பிட்டு, முக்கிய பகுதிகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். முதல் மூன்று கட்டுரைகளை தெளிவாக தெரிந்திருந்தால், இரண்டு மதிப்பெண் மற்றும் "பேராகிராப்&' வகை வினாக்களுக்கும் எளிதாக விடையளிக்கலாம்.செய்யுள் பகுதிகளை பலமுறை எழுதிப்பழக வேண்டும். ராகம் போட்டு மனப்பாடம் செய்தால் எளிதாக மறக்காது.இலக்கணத்தில் டென்ஸ் காலம் என்றாலே அனைவருக்கும் டென்ஷன் அதிகரிக்கிறது. டிகிரீஸ் ஆப் கம்பேரிசன், டென்ஸ், வெர்ப் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தினால், இரண்டாம் தாளில் எளிதாக மதிப்பெண் பெறலாம். கடிதம் பகுதியில் தேதி, இடம், அனுப்புநர் மற்றும் பெறுநர் உள்ளிட்ட காலப்பகுதிகளை தெளிவாக குறிப்பிட வேண்டும்.தர்மராஜ், அறிவியல் (சமத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி): ஒரு மதிப்பெண் வினாக் களுக்கான விடைகளை மன வரைபடம் வரைந்து நினைவில் நிலைநிறுத்த வேண் டும். தேவையான இடங்களில் உதாரண மளிக்க வேண்டும்.அறிவியலில் வரக்கூடிய கணக்குகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மூலக்கூறு வாய்ப்பாடுகள் மற்றும் கணித குறியீடுகளை மனப்பாடம் செய்து தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். எந்திரவியல், உலோகம் அலோகம், உயிரின அமைப்பு பாடங்களை மாணவர்கள் படித்தால் எளிதில் மதிப்பெண் பெற முடியும். வேறுபடுத்திக்காட்டுதல் வகை வினாக்களுக்கு அட்டவணையிட்டு எழுதினால்தான் முழு மதிப்பெண் கிடைக் கும்.ஐந்து மதிப்பெண் பகுதியில் உட்தலைப்பு மற்றும் தெளிவாக படம் வரைந்து சரியான பாகங்களை குறிப்பிட வேண்டும். படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து போதிய விளக்கமின்றி இருந்தால் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.எனவே, படம் வரையக்கூடிய வினாக்களை முடிந்தளவு தவிர்க்க வேண்டும் அல்லது பலமுறை பயிற்சி எடுத்து தெளிவாக படம் வரைய மாணவர்கள் முன்வர வேண்டும்.மேரி புஷ்பம், சமூக அறிவியல் (ஜமீன்ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி): ஈடுபாட்டுடன் சரித்திரம் பாடத்தை புரிந்து படித்தால் கட்டாயமாக சரித்திரம் படைக்கலாம். சமூக அறிவியலில் வரலாறு பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு ஆண்டுகளை கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அதற்காக வரலாற்று சம்பவங்கள் நிகழ்ந்த ஆண்டுகளை தனியாக குறிப்பெடுத்து, தினமும் படித்து பார்க்கலாம். ஐந்து மதிப்பெண் வினாக்களை படித்திருந்தாலே, ஒன்று மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கும் எளிதாக விடையளிக்கலாம். முக்கிய இடம், ஆண்டுகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்.பாடத்தை முழுமையாக புரிந்து படித்தால் தான் ஒரு மதிப்பெண் வினாக்கள் மூலம் முழு மதிப்பெண்ணை பெற முடியும். ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு பத்தியாக விடையளிக்காமல், தனித்தனி பாயிண்டுகளாக குறிப்பிட வேண்டும். குறைந்தபட்சமாக ஐந்து பாயிண்டுகளாவது குறிப்பிட்டால் முழு மதிப்பெண் கிடைக்கும். மேப் பகுதியில் எல்லைகள், மன்னர் களது ஆட்சிப்பகுதிகளை தனித்தனி கலர் மூலமாக குறிப்பிட வேண்டும். தினசரி வீட்டில் மேப்பில் பகுதிகளை குறித்துப் பார்த்து பயிற்சி எடுத்தால், சிரமமின்றி மதிப்பெண்களை அள்ளிச்செல்லலாம்.இவ்வாறு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.