உள்ளூர் செய்திகள்

மேலாண்மை நுழைவுத் தேர்வு: குளறுபடிக்கு தீர்வு காணப்படுமா?

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.எம்.,) சேருவதற்கான "கேட்&' நுழைவுத் தேர்வு, முதல் முறையாக இந்தாண்டு ஆன்-லைன் மூலம் நடந்து வருகிறது. நாடு முழுவதும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 2.4 லட்சம் பேர் இந்த தேர்வுகளை எழுதி வருகின்றனர். கடந்த 28ம் தேதி நுழைவுத் தேர்வு துவங்கியது. அப்போது கம்ப்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை, பெங்களூரு, சண்டிகார், லக்னோ உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுத முடியவில்லை. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதில், சர்வர்  தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பாதிப்பு என்று கூறப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று முன்தினமும் சில மையங்களில் கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. நேற்றும் இதே நிலை நீடித்தது. மும்பை, காஜியாபாத், பெங்களூரு ஆகிய மையங்களில் கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக பலர், தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதனால்"கேட்&' நுழைவுத் தேர்வு தொடர்பாக தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாதவர்களுக்கு, விரைவில் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய மேலாண்மை கல்வி நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. ஆமதாபாத், இந்திய மேலாண்மை கல்வி நிறுவன அதிகாரிகள், இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து, மற்ற மேலாண்மை கல்வி நிறுவன அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். முதல்முறையாக ஆன்-லைன் மூலம் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான ஒப்பந்தம், அமெரிக்காவைச் சேர்ந்த புரோமெட்ரிக் என்ற நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஏற்பட்ட குளறுபடி குறித்து புரோமெட்ரிக் அதிகாரிகள் கூறுகையில், வைரஸ் தாக்குதல் காரணமாக, கம்ப்யூட்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விட்டது. இதை சரிசெய்வதற்கான முயற்சியை மேற் கொண்டுள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்