அரசு சார்பில் இலவச கனரக டிரைவிங் பயிற்சி
தமிழக அரசின் சாலை போக்குவரத்து நிறுவனம் இப்பயிற்சியை அளிக்கிறது.இதில் சேர 1.1.2010 அன்று 20 வயதுக்கு குறையாமலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன டிரைவிங் லைசென்ஸ் பெற்று ஓராண்டு ஆகி இருக்க வேண்டும். பி.எஸ்.வி., பேட்ஜ் வைத்திருப்போர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் 19 ஆயிரத்து 500 அரசே ஏற்கும். இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்துடன் கல்வி, ஜாதி, வருவாய், இதர டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றின் நகல்களையும் இணைக்க வேண்டும். அவற்றை, "தனி அலுவலர், சாலை போக்குவரத்து நிறுவனம், ஓட்டுனர் பயிற்சி பிரிவு, கும்மிடிப்பூண்டி- 601 201, திருவள்ளூர் மாவட்டம்&' என்ற முகவரிக்கு டிச. 7ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் என கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.