உள்ளூர் செய்திகள்

ஜப்பானிய மொழி பயிற்சி நிறுவனம்: புதுச்சேரியில் துவக்கம்

புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் துவக்கப்பட் டுள்ள பயிற்சி நிறுவனத்தை ஜப்பான் நாட்டு துணை தூதரக அதிகாரி தாகயூ கிடகாவ துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டு பயிற்சி ஆசிரியைகள் தனஹா, கவாசகி, ஆதிகேசவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் ஜப்பான் நாட்டு துணை தூதரக அதிகாரி கூறியதாவது: இந்தியா மக்கள் தற்போது ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்தாண்டு சென்னையில் ஜப்பான் மொழித் தேர்வு நடந்தது. அதில் 1873 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர். இந்தாண்டு 2660 பேர் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். தேர்வு எழுத உள்ளவர்கள் ஜப்பானிய மொழி, கலாசாரம், வர்த்தகம் செய்யும் விதம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்கின்றனர்.   இதனால் ஜப்பானிய நிறுவனங்களில் அவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவில் ஜப்பானியர்கள் அதிக முதலீடு செய்துள்ளனர்.கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவில் ஜப்பானிய முதலீட்டில் 328 நிறுவனங்கள் துவங்கியது. தற்போது 1049 றுவனங்களாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 2006ம் ஆண்டு 35 நிறுவனங்கள் அமைந்தது. தற்போது 169 நிறுவனங்களாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஜப்பானியர்கள் அதிக முதலீடு செய்ய காரணம், தமிழ் மொழியின் இலக்கணமும் ஜப்பானிய மொழியின் இலக்கணமும் ஒத்துள்ளதால் இரு மொழியினரும் எளிதில் கற்றுக்கொள்ள வசதியாக உள்ளது.தமிழகத்தில் அதிக உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் திறமை வாய்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். சமீபத்தில் இந்தியா மற்றும் ஜப்பானிய பிரதமர்கள் இரு நாட்டு வளர்ச்சி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளனர். அதில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மொழி, கலாசாரம், சுற்றுலா, கூட்டுறவு, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றிலும் ஒத்துழைப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்