உள்ளூர் செய்திகள்

பணி நியமன கட்டுப்பாட்டால் செயல்படாத கிராம நூலகங்கள்

அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி, மாவட்ட நூலகம் மூலம் கிராம நூலகங்களுக்கு, ஒரு லட்சம் ரூபாயில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிராம நூலகங்களில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ராணுவத்தினர், தனியார் நிறுவன பணியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களாக நியமித்து, காலை 9 முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 முதல் 7 மணி வரையும் நூலகத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டது.தொகுப்பூதியமாக மாதம் 750 ரூபாய் வழங்கப்படுவதால், ஓய்வு பெற்ற பணியாளர்கள், இப்பணிக்கு ஆர்வம் காட்டவில்லை. பணியாளர்கள் இல்லாததால் பெரும்பாலான நூலகங்கள் பூட்டிகிடக்கின்றன. கிராம நூலகங்களை முறையாக செயல்படுத்த பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை அதிகரித்து வழங்கவும், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களை நூலக பணியாளர்களாக நியமிக்கவும் அரசு அனுமதி வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்