உள்ளூர் செய்திகள்

தேசிய மேப்பத்தான் போட்டி :ராமகிருஷ்ணா கல்லூரிக்கு பரிசு

கோவை: தேசிய அளவிலான மேப்பத்தான் போட்டியில் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி இரண்டாம் பரிசு பெற்றுள்ளது.ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் அலமேலு கூறியதாவது:மேப்பத்தான் போட்டி என்பது பூமி நிலப்பரப்பின் வரைபடங்களை உருவாக்குவதற்கும், ஓபன் சோர்ஸ் டேட்டா மற்றும் மேப்பிங் மென்பொருட்களை பயன்படுத்துவதற்கான வரைபடம் தயாரிப்பதாகும். மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மும்பை கல்விக்கான இலவச லிப்ரோ மற்றும் ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் உருவாக்கும் போேஸ நிறுவனம், இஸ்ரோ, திருப்பதி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் தேசிய அளவிலான மேப்பத்தான் போட்டி நடந்தது.இதில் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி சிவில் இன்ஜினியரிங் துறை மாணவர்கள் ஞானரோஷன், கோபிசிலம்பரசன், தனுஷ், ஹரி விக்னேஷ் சமர்ப்பித்த திட்டம் இரண்டாம் இடம் பிடித்தது. இத்துடன் வின்னர்ஸ் பிரிவில் தேர்வு பெற்ற 74 அணிகளில் ராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர்கள் 4 மற்றும் 15வது இடம் பிடித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, சிவில் இன்ஜினியரிங் துறை தலைவர் சரோஜினி உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்