உள்ளூர் செய்திகள்

காமராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி தினம்

திருப்பூர்: காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் வரும் ஜூலை, 15ம் தேதி அரசு பள்ளிகள் செயல்படும்; அன்று, வேலை நாள் என கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பணிகள் தொடர்பான பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டி மாணவ, மாணவியருக்கு நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும்.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிக்கல்வி துறை இயக்குனரின் வழிகாட்டுதல்கள் பின்பற்றி, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளை போன்று வட்டார, மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. கல்வி அலுவலகங்களிலும், காமராஜ் போட்டோ வைத்து, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்