உள்ளூர் செய்திகள்

இஸ்ரோ விஞ்ஞானி படித்த பள்ளி முன் கொண்டாட்டம்

விழுப்புரம்: சந்திராயன்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரத்தில் படித்த பள்ளி முன் முன்னாள் மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-3 விண்கலம் நேற்று பிற்பகல் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலத்தின் திட்ட இயக்குனராக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் சிறப்பாக செயல்பட்டு இஸ்ரோவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக விழுப்புரத்தில் வீரமுத்துவேல் படித்த ரயில்வே பள்ளியின் முன் நேற்று மாலை திரண்ட பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சிறந்த விஞ்ஞானியை உருவாக்கிய இந்த ரயில்வே பள்ளி தற்போது மூடிக் கிடக்கிறது. இப்பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்