சுயநிதி மருத்துவ கல்லுாரி நிர்வாக கட்டணம் வெளியீடு
சென்னை: சுயநிதி மருத்துவ கல்லுாரியில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம், https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து கல்லுாரிகளிலும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ஆண்டு கட்டணம், 13.50 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 4.35 லட்சம் ரூபாய் முதல், 4.50 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.