உள்ளூர் செய்திகள்

சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்க கோரி வழக்கு

சென்னை: பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த பொது நல மனு:சென்னையை அடுத்த பூந்தமல்லி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, தர்மபுரி மற்றும் கடலுார் ஆகிய நகரங்களில், பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், முதல்வர், முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50 சதவீதத்துக்கு மேல் காலியாக உள்ளன.காலியிடங்களை நிரப்பாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச், மனுவுக்கு அக்., 10க்குள் பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்